மகரம் ராசி அன்பர்களே.! மன அமைதி கிடைக்கும்.
இன்று தொழில் வளர்ச்சி கூடும். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி இருக்கும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் சிறப்பான சூழல் இருக்கும். கூட்டு முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பக்கபலமாக இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு என்ன வேண்டுமோ உங்களால் செய்து கொடுக்க முடியும். குடும்பத்தில் அனைவரிடமும் முகம் கொடுத்து பேசுவீர்கள்.
புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புன்முறுவல் சிரிப்போடு எப்பொழுதும் இருப்பீர்கள். வசீகரத் தன்மையுடன் நீங்கள் இருக்க முடியும். காதல் கண்டிப்பாக கைகூடி விடும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கும் திடீர் பிரச்சனைகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும். இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை