மகரம் ராசி அன்பர்களே.! பொறுப்பாக இருந்து எதையும் செய்வீர்கள்.
இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் எல்லாம் பண உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் சேரும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்க்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். பொதுநலனில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கஷ்ட நஷ்டத்தில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். பிள்ளைகளால் பெருமையும் திருப்தியும் ஏற்படும். மனம் விட்டு பேசுவீர்கள். மனம் நிம்மதி அடையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். கண்டிப்பாக நல்லது நடக்கும். நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனையும் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லும். பொறுப்பாக இருந்து எதையும் செய்வீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக சிறப்பான சூழல் அமையும். எல்லா விதத்திலும் உங்களுக்கு நல்லது நடக்கும். பெண்களுக்கு முயற்சிகள் மூலம் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் நல்ல நாள். மாணவர்கள் உற்சாகமாக செயல்பட முடியும். எல்லா விதமான காரியங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். கல்வி அக்கறை ஏற்படும். காதல் விவகாரங்கள் மனதிற்கு சஞ்சலத்தைக் கொடுக்கும். விட்டுக் கொடுத்து சென்றால் காதல் கைகூடி விடும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்