Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மனக்குழப்பம் தீர்ந்துவிடும்….! பண பற்றாக்குறை ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் சரியாகும். மனக்குழப்பங்கள் சரியாகி விட்டால் காரியங்களில் வெற்றி இருக்கும். காரியங்கள் தெளிவு இருக்கும். மறதியால் சில பணிகள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் அலைச்சல் ஏற்படும். எடுத்த காரியங்களை அழகாக எளிமையாக நிதானமாக செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பண பற்றாக்குறை ஏற்படலாம் அதற்காக கடன் வாங்க நேரிடலாம். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் அரசாங்கத்தின் மூலம் வரக்கூடும். சூழ்நிலையை புரிந்துகொண்டு வேலை பார்த்தால் முன்னேற்றம் நிச்சயம். உயரதிகாரிகளின் பேச்சை கேட்டால் உத்தியோகத்தில் உயர்வான நிலையை எளிதாக அடைய முடியும்.

குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் இருக்கக்கூடும். பொறுமையை கையாள வேண்டும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் நடந்து கொள்ளுங்கள். காதலில் மனம் முறிவு இருக்கும். மனமுடைந்த காதல் கொஞ்சம் வருத்தப்பட்டு கொண்டே இருக்கும். இன்று மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களும் மிகவும் கவனமாக படிக்க கூடிய சூழலும் இருக்கும். கல்வியில் இருந்து தடைகளும் விலகிச் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Categories

Tech |