Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்….! பிரச்சனைகள் மறையும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டாம். 

இன்று அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் உறவுகளிடம் கொஞ்சம் விவாதம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபாரி வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேறும் வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேரும். சந்திராஷ்டம் உங்களுக்கு ஆரம்பிக்க இருப்பதினால் சில விஷயங்களை முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும். மன குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவது விற்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டாம். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

கணவன் மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தங்கள் நீக்கி சந்தோஷமான சூழ்நிலை கண்டிப்பாக ஏற்படும். உங்களுடைய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்து பார்த்துதான் முடிவு எடுக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு குழப்பம் இருக்கும். குழப்பத்தின் காரணமாக சில வார்த்தைகள் வெளிப்பட்டுவிடும். யோசித்து நிதானமாக பேச வேண்டும். மாணவர்களுக்கு கொஞ்சம் தடைகளை உடைத்தெறியும் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. அதனை நீங்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்க தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |