மகரம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரத்தால் அனுகூலம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். வீண் செலவும், அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். நற்சுகம் பொருளாதார மேம்படும்.
இன்று நன்மைகள் பல விதத்தில் கிடைக்கும். மதிப்பு, மரியாதை மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் கொஞ்சம் வந்தாலும் கவலை வேண்டாம். அனைத்தும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்துகொண்டு அனுசரித்து நடந்து கொள்வார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். முயற்சிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இன்று உங்களுக்கு அது அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அறிவு இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் சிவப்பு