மகரம் ராசி அன்பர்களே, இன்று மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள், இன்று ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற எண்ணம் மனக்கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடும். கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
உடன் இருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்கு தடை வராமல் காக்கும். இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் நடக்கும். மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்