Categories
உலக செய்திகள்

“ஹரி- மேகன் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும்”… அறிக்கை வெளியிட்ட பிரிட்டன் மகாராணி…!!

ஹரியும் மேகனும் அளித்த பேட்டிக்கு பிரிட்டன் மகாராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதில், மேகன் எனக்குள் தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது  என்றும் கலப்பின பெண்ணான எனக்கு பிறந்ததால் தான் என் மகனுக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

அதேபோல் ஹரியும் நான் ஏன் என் சகோதரனுடன் பேசவில்லை என்றும் நாங்கள் எதற்காக கனடாவில் இருந்து வெளியேறினோம் என்பது குறித்தும் கூறினார். இந்த பேட்டியை பார்த்த சிலர் ஒரு ராஜ குடும்பத்தில் இத்தனை  பிரச்சனை இருக்குமா? ஹரியும் மேகனும்  அரச குடும்பத்தை விட்டு வெளியேறியது  சரி தான் என்று சிலர் கூறிவந்தனர். இந்த பேட்டியை பிரிட்டன் மகாராணிக்கு பார்க்க நேரம் கூட இருக்காது என்று சிலர் கூறி வந்தனர் . ஆனால்  பிரிட்டன் மகாராணியார் இந்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  ஒரு அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஹரியும் மேகனும் எங்களுக்கு எவ்வளவு சவாலாக இருந்து வருகின்றனர் என்பதை ராஜ குடும்பதினர்  அறிந்ததிலிருந்தே வருத்தப்பட்டு வருகின்றனர். அதில் குறிப்பிடப்பட்ட இனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும். அந்த பிரச்சனைகள் ராஜ குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்படும். ஹரி, மேகன் , ஆர்ச்சி மூவருமே என்றுமே ராஜ குடும்பத்தினராகவே விரும்பப்படுவார்கள்” என்று மகாராணியார் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை பார்த்ததும் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |