மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதில் தலைநகர் மும்பை வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மேற்கு பகுதி மாநிலங்களிலும் பீகார், ஒடிசா, அசாம் ஆகிய கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள மித்தை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.
தாதர் பாறை போன்ற இடங்களில் பெரும்பாலான சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக தெரிவதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் சொல்லுனா துயரத்திற்கு ஆளாகி இருக்கும் மும்பை நகர வாசிகள் இந்த மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.