லண்டனில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு லண்டனில் Leonie Beatrice எனும் இளம்பெண் ஹைகேட் நகர் அருகே அமைந்துள்ள மனநல காப்பகம் ஒன்றில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் Leonie Beatrice திடீரென காணாமல் போனதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மனநல பாதிப்பு உடையவர் என்பதால் காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அந்த இளம்பெண் லண்டன் நகரில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மேலும் இதற்கு முன்னதாக அவர் இசலிங்டன் மற்றும் கேம்டன் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்ததாகவும், அப்பகுதிக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட காவல்துறையினர் அவரை பொதுமக்கள் எங்கேனும் கண்டால் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.