Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மழைநீரில் மாயமான 5 வயது சிறுமி… விளையாடும்போது நேர்ந்த சோகம்… கதறும் குடும்பத்தினர்…!

திருச்சியில் 5 வயது சிறுமி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர். திருமணமாகிய சக்திவேல் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அடித்தளம் போட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக அந்தக் குழியில் நீர் நிரம்பியிருந்தது.

இந்நிலையில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சக்திவேலின் 5 வயது மகள் பாண்டிஶ்ரீ அவரது வீட்டின் அருகில் இருந்த காலி மனை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமி நீண்ட நேரம் வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர்.

அதன்பின் மனையின் அருகில் தேடிய குடும்பத்தினர் நீர் நிரம்பிய குழிக்குள் சிறுமி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.மேலும் இது குறித்து விமான நிலையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |