Categories
உலக செய்திகள்

மாயமான இந்தோனேஷியா விமானம்… பாகங்கள் கண்டுபிடிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் தலைநகர் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் விலகிய தாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் துண்டிக்கப்படும் தகவல் வெளியானது. இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியிருந்த நிலையில் இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி கூறும்போது: வடக்கு பகுதியில் உள்ள கடலின் அருகே சில விமானங்கள் பாகங்கள் கிடைக்கின்றது. மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று இந்த பாங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. தண்ணீரிலிருந்து கிழிந்த ஜீன்ஸ், இரும்பு பாகங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்ததாகத் தெரிவித்தார். அந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |