தென்னமெரிக்காவில் நரம்பு மண்டல நோயால் அவதிப்பட்டு வந்த 51 வயது தாய் தானாகவே முன்வந்து கருணைக்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னமெரிக்காவில் வசித்து வந்த 50 வயதுடைய Martha என்பவர் கடுமையான நரம்பு மண்டல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நோயால் martha வினால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் இருந்துள்ளது. ஆகையினால் martha விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதாவது கருணை கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். அதன்படி தானாகவே முன்வந்து சில மாதங்களுக்கு முன்பாக கருணைக்கொலை சட்டத்தின் கீழ் பதிவிட்டு அனுமதியையும் பெற்றுள்ளார். இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை martha கருணைக்கொலை செய்யப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து martha வின் மகன் கூறியதாவது, கருணைக் கொலை செய்வதற்கு முன்பு வரை தன்னால் இயன்ற அளவு தன்னுடைய அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.