Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மீண்டும் திறந்தாச்சு…. மகிழ்ச்சியில் மாணவ- மாணவிகள்…. இனி வரவே கூடாது….!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட்டதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தமிழகத்தின் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஈரோட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்தது குறித்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்போது மாணவி நஷ்ரீன் கூறியபோது, தான் ஆன்லைன் வகுப்பு மூலம் பிளஸ்-2 பயின்று வந்தேன். எனவே பாடம் நடத்தும் போது இடையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் கேட்டு தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தோம்.

ஆனால் தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவி தெரிவித்துள்ளார். மேலும் மாதந்தோறும் பள்ளிக்கூடத்தில் தேர்வுகள் நடைபெறும் என்பதால் இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்றும் மாணவி நஷ்ரீன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அரசு பள்ளிக்கூட ஆசிரியை சுலோச்சனா பேசியபோது, ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது ஏதோ கடமைக்கு வேலை பார்ப்பது போல் இருந்தது. ஆகவே தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவர்களின் முகத்தை பார்த்து பாடம் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

எனவே நாங்கள் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் மாணவ- மாணவிகளுக்கு புரியவில்லை என்றால் மீண்டும் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பின் மாணவர்கள் தங்கள் பாடம் புரியவில்லை என்றால் எங்களை தனியாக அணுகி சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வார்கள் என்று ஆசிரியர் சுலோச்சனா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் ஸ்ரீமதி, பிரீத்தி ஆகியோர் கூறியபோது, ஆன்லைன் மூலம் கல்வி கற்றது மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்ததால் ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டறியலாம் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் 3-வது அலை கண்டிப்பாக வரக்கூடாது என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு இருப்பதனால் தங்களுக்கு பயமில்லை என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |