மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவமும் அதோடு தெரிந்தே செய்த பாவமும் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஐதீகம்.
இரவில் சிவனை வணங்குவதற்கான காரணம்
இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து விடாமல் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். அந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களை பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தை அதாவது அந்த நாளை சிவராத்திரி என்ன கொண்டாட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மற்றும் சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் அவர்கள் வேண்டுவதையும் கொடுத்து முடிவில் மோட்சத்தை அருள வேண்டும் என்றும் உமாதேவியார் வேண்டிக்கொண்டார். அதனால் ஆனந்தம் கொண்ட சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என அருள் புரிந்தார். இதுவே சிவராத்திரி அன்று விரதமிருந்து இரவு முழுவதும் சிவபெருமானை மக்கள் வழிபடுவதற்கான காரணமாகும்.