தாய்லாந்து நாட்டின் , புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார் .
பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும் முடிசூட்டு விழாவில், முதலில் தலைமை புத்த துறவி,வெள்ளை உடையணித்திருந்த மன்னரை , நாட்டின் பல்வேறு புன்னிய தீர்த்தங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு, நன்னீராட செய்தார். அதன்பின் பௌத்த மற்றும் பிராமண முறைப்படி சடங்குகள் நடந்தன .
பின்னர், இந்தியாவிலிருந்து வரவழைக்க வைக்கப்பட்ட வைரத்தால் ஆன 7.3 கிலோ தங்கத்தினால் ஆன மணிமுடி அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு சூட்டப்பட்டது.