Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாபாரதத்தை படமாக யார் எடுத்தாலும் நான் நடிப்பேன்” பிரபல பாலிவுட் நடிகர் அதிரடி முடிவு….!!!

“ஆதிபுருஷ்” திரைப்படத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார். 

விக்ரம் வேதா திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சைஃப் அலி கான் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்” ஆகும். இந்த திரைப்படம் ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்திருக்கும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலி கானும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து நடிகர் சைஃப் அலி கான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ” இந்திய இதிகாசங்களின் ஒன்றான மகாபாரதத்தை யாராவது “லார்ட் ஆப் ரிங்ஸ்” என்ற திரைப்படம் போன்று பிரம்மாண்டமாக எடுத்தால் அதில் கண்டிப்பாக நான் நடிப்பேன்” என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து நடிகர் அஜய் தேவ்கன் கூறியதாவது, “கச்சே தாகே” என்ற திரைப்படத்தில் நடிக்கும் போதே கலந்துரையாடி இருந்தேன். இது எங்கள் தலைமுறையின் கனவு படம் பாலிவுட் சினிமாவாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி, இது போன்ற ஒரு குழுவில் பணியாற்ற நான் விரும்புகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |