Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை… இன்று 552 பேருக்கு கொரோனா உறுதி!

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,000-த்தை தாண்டியுள்ளது.

மொத்தமாக 5,218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை மட்டும் 250 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியான தகவலின்படி, நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது.

அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோணவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது.

இந்தநிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 552 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை, புனே ஆகிய பகுதிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனாவில் இருந்து மீளமுடியாமல் மகாராஷ்டிரா மாநிலம் திணறி வருகிறது.

Categories

Tech |