இந்தியாவில் கொரோனா தலைநகரமாக மகாராஷ்டிரா மாறி வருகிறது என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,84,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் தலைநகராக மகாராஷ்டிரா மாறி இருக்கிறது என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில்:
“நாங்கள் எந்த குற்றமும் கூறவில்லை. அரசியல் செய்வதைவிட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளோம். மாநிலத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறேன். நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 24 சதவீதம் மகாராஷ்டிராவில் தான் உள்ளது. இதேபோல நாட்டின் மொத்த பலி எண்ணிக்கையில் 41 சதவீதம் பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இதனால் நாட்டின் கொரோனா தலைநகராக மகாராஷ்டிரா மாறி உள்ளது” என அவர் கூறியுள்ளார்.