Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரிசோதனை கட்டணம் ரூ.2200ஆக குறைப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4400ல் இருந்த ரூ.2200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் மஹாராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,717 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் 55,451 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 2,044 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2200 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |