மகாராஷ்டிராவில் இன்று மேலும் 92 கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 6565 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல, நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை முடிந்த பிறகு ஊடரங்கு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனையின் போது பிரதமர் உட்பட அனைத்து முதலைவர்களும் முகமூடி அணிந்துள்ளனர். இந்த நிலையில், மகதாஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.