Categories
அரசியல் தேசிய செய்திகள்

#MaharashtraCabinet: பாஜகவுக்கு 9…. சிவசேனாவுக்கு 9… புதிதாக 18அமைச்சர்கள் பதவியேற்பு…!!

அரசியல் குழப்பம் என்பது மகாராஷ்டிராவில் முடிவிற்கு வந்துவிடுமா ? என்ற ஒரு கேள்வியை எதிர்நோக்கி தான் இந்த அமைச்சரவை விரிவாக்கம் என்பது இன்றைய தினம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி முதலில் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திருந்தார்கள் சிவ சேனாவிற்கு.. தற்பொழுது அமைச்சரவையிலும் தங்களது பங்கை பெருமளவில் குறைத்துக் கொண்டு சிவசேனாவுடன் சரிசமமாக அமைச்சரவையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தனிப்பெருங்கட்சியாக பாரதி ஜனதா கட்சி இருக்கிறது. 106 சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் கொண்டிருக்க கூடிய சூழலில் சிவ சேனாவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு  36லிருந்து 40 பேர் ஆதரவாக இருக்கிறார்கள். அப்படி என்றாலும் அவர்களது எண்ணிக்கை சரிபாதியாக குறையாக தான் சிவசேனாவிற்கு இருக்கிறது. எனினும் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பிலும் அதிருப்தி வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக மொத்தம் 18 அமைச்சர்களில் 9 அமைச்சர், 9 துறைகளை பாரதிய ஜனதா கட்சியும்,  சிவசேனாவின் தலைமையிலான குழுவிற்கு 9 இடங்களையும் அவர்கள் சரிபாதியாக பிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது போலவே முக்கிய இலாக்காக்களையும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை கொண்ட சிவசேனாவிற்கு விட்டுக் கொடுப்பதற்கும், பாரதிய ஜனதா கட்சி முன் வந்திருக்கிறார்கள்.

இதில் சுயேச்சை எம்எல்ஏக்கள் என்று சொல்லும்போது எங்களுக்கு பதவி இல்லை என்றாலும்,  நாங்கள் தொடர்ச்சியாக இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிப்போம் என்ற ஒரு விஷயத்தை கூறியிருக்கின்றார்கள். இதனால் சுமுகமான கேபினட் விரிவாக்கம் என்பது நடந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு மேலாக ஆகியும் கூட எப்போது அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஒரு வேளை அதிருப்தி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர்  அமைச்சரவையை எதிர்பார்க்கிறார்களா?

அவர்களுக்கு அதிகார தேவைப்படுகிறதா ? உள்ளிட்டவை எல்லாம் கேள்வியாக இருந்த நிலையில், பல கட்ட ஆலோசனைக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் என்பது மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதில் யார் யாருக்கு எந்தெந்த இலாக்கா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒன்பது + ஒன்பது என்ற எண்ணிக்கை மட்டும் தான் அறிவிக்க ப்படுகிறது. ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்று வருகின்றார்கள். இனி யார் யாருக்கு என்னென்ன இலாகாக்கள் கொடுக்கப்பட போகிறது என்பதை பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

Categories

Tech |