மகாராஷ்டிராவிற்கு கொரோனா தடுப்பூசி டோஸ்களை , மத்திய அரசு குறைவாக வழங்கப்படுவதாக ,அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரான ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் ,இதன் தாக்கம் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ,தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் ,மத்திய அரசின் சார்பாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொற்று பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ள, மகாராஷ்டிராவில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரான ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
அவர் கூறும்போது ,மத்திய அரசிடமிருந்து 7.5 லட்சம் டோஸ்கள் மட்டுமே ,மகாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ,உத்திரபிரதேசம், குஜராத் ,மத்திய பிரதேசம் ,ஹரியானா போன்ற மாநிலங்களில் ,மகாராஷ்டிராவை விட அதிகமான தடுப்பூசி டோஸ்கல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மத்திய மந்திரியான பிரகாஷ் ஜவடேகர் இந்தக் குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் . பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது , மத்திய அரசானது அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ,முன்பு வழங்கிய தடுப்பூசிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ,அந்த மாநிலத்திற்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார் . தற்போது மகாராஷ்டிராவில் 23 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும், இந்தத் தடுப்பூசிகள் 5 முதல் 6 நாட்களுக்கு ,அம்மாநிலத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். ஏற்கனவே மகாராஷ்டிரா சரியாக திட்டமிட்டு செயல்படாததால் 5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்து விட்டதாக, ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். தடுப்பூசிகளை திட்டமிட்டு வழங்குவது மாநில அரசின் கடமை என்று அவர் கூறினார்.