நாம் அறியாத மகாசிவராத்திரியின் மகத்துவங்கள்
மாத சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. என வருடம் முழுவதும் பல சிவராத்திரி வந்தாலும், மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரி களையும் விட சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. தேய்பிறை சதுர்த்தி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். ராத்திரி என்ற சொல்லிற்கு அனைத்து செயலற்ற உடல் என்று பொருள். அதாவது உயிர்கள் செயலின்றி ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி.
சிவராத்திரி காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி நான்கு கால பூஜை செய்து வழிபடுவது விசேஷம்.மகாசிவராத்திரில் ஈசனை வழிபட்டால் எத்தகைய பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டு விலகிடும். இதனால் இங்கு மட்டுமல்லாது மறுஜென்மத்தில் வாழ்வு பெற முடியும். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்கது மகா சிவராத்திரி.