மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக செயல் தலைவர் ஜே.பி நட்டா, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு முன்னதாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியிலும், காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.