Categories
உலக செய்திகள்

இது மிகப்பெரிய மோசடி..! மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு… நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை..!!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியும், மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின் ( 56 ) தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர் ஆவார். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் நிர்வாக இயக்குனராகவும், பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் புகார் தெரிவித்து வந்துள்ளார்.

அதாவது ராம்கோபின், மகராஜ் என்ற தொழிலதிபரிடம் சுங்கவரி இல்லாமல் இந்தியாவில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்து தருவதாக கூறி ரூ.3 கோடியே 33 லட்சம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இவர் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு அந்த வழக்கில் ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் திங்கட்கிழமை அன்று சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக கருதப்பட்ட ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடக்கத்தில் ராம்கோபினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது தீர்ப்பு வெளியாகியிருப்பதால் மேல்முறையீடு செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையிலேயே அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |