நடிகை ஸ்ரீதிவ்யா சிறு வயதில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் . சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த லதா பாண்டி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இதையடுத்து நடிகை ஸ்ரீதிவ்யா பெங்களூரு நாட்கள் ,ஈட்டி, பென்சில், மருது உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் . ஆனால் அந்தப் படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. தற்போது நடிகை ஸ்ரீதிவ்யா இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார் .
நடிகை ஸ்ரீதிவ்யா அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . இந்நிலையில் அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . கடந்த 2000 -ல் யுவராஜு என்ற படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் ஸ்ரீதிவ்யா நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது .