முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபு மற்றும் அஜித்தை அழகானவர்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான “கிராக்” எனும் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் “லாபம்” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் உங்களுக்கு மிகவும் அழகாகத் தெரியும் நடிகர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன் தெலுங்கில் மகேஷ்பாபு என்றும் தமிழில் அஜித் என்றும் கூறியுள்ளார்.