Categories
சினிமா தமிழ் சினிமா

புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபு… ரசிகர்கள் எதிர்ப்பு…!!!

பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான ஸ்பைடர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆனால் புகையிலையை விற்பனை செய்வதற்கு விளம்பரப் படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருள் விளம்பரத்தில் தான் நடிகர் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர்கள் பலரும் மகேஷ்பாபு இது போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது என்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றார்.

Categories

Tech |