Categories
உலக செய்திகள்

அரசியலிலிருந்து தற்போது விலக மாட்டேன்… மகிந்த ராஜபக்சே அறிவிப்பு…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே அரசியலிலிருந்து தற்போது விலகபோவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நாட்டையே புரட்டிப் போட்டது. மக்களும் அரசாங்கமும் கடும் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பல மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பி தாய்லாந்தில் தங்கி உள்ளார். மேலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவர், நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே அவர் நாட்டிலிருந்து தப்ப முடியாத நிலையில் உள்ளார்.

இந்நிலையில், மக்களுக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மீது கோபம் அதிகரித்திருக்கிறது. எனவே, மஹிந்த ராஜபக்சே அரசியலில் விட்டு விலகி விடுவார் என்று கூறப்பட்டது. இதனை மறுத்திருக்கும் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருப்பதாவது, தற்போது அரசியலை விட்டு விலகக்கூடிய எண்ணம் இல்லை. தொடர்ந்து அரசியலில் தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |