மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் மாடல் 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ உருவாக்கப்படுகிற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . இந்த டி.யு.வி.300 பிளஸ் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது . மேலும் , இதன் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது .
குறிப்பாக புதிய டி.யு.வி.300 பிளஸ் அடுத்த ஆண்டு புதிய புகை விதிகள் அமலாகும் முன்பாகவே இவ்வாகனம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ஸ்பை புகைப்படங்களின் படி புதிய கார் மேம்பட்ட ஆறு-ஸ்லாட் கிரில், கருப்பு நிற ஹனிகாம்ப் பேட்டன் கொண்டுள்ளது . மேலும் மற்ற மாற்றங்களின் படி முற்றிலும் புதிய ஹெட்லேம்ப் கூர்மையாகவும், புதிய ஃபாக் லேம்ப்களும் வழங்கப்பட்டுள்ளது .
இதைச் சுற்றிலும் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர் கொண்டிருக்கிறது . இதன் பின்புறம் டி.யு.வி.300 பிளஸ் மாடலில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற டெயில்கேட் மற்றும் ஸ்பேர் வீல் வழங்கப்பட்டுள்ளது . மேலும் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடலில் தற்போதைய மாடலை விட அதிகளவு மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் என்ஜின் மற்றும் டூ-ஸ்டேஜ் டர்போசார்ஜர் வழங்கப்பட்டுள்ளது . இது 100 ஹெச்.பி. திறன் கொண்டது . இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.