Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்க பொண்ணு மைனர்” குடும்பத்தினர் புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று மாதங்களாக அதே பகுதியில் வசிக்கும் மைனர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தான் காதலித்த மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |