T 20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான நடந்த போட்டியின்போது இலங்கை அணியில் லஹிரு குமாரா ,லிட்டன் தாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் பரபரப்பு காணப்பட்டது .
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ்- முகமது நைம் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் பவர் பிளேவின் கடைசி ஓவரில் இலங்கை அணியில் லஹிரு குமாரா வீசிய பந்தை எதிர்கொண்ட லிட்டன் தாஸ் தூக்கி அடிக்க அந்த பந்தை ஷனாகா கேட்ச் பிடித்தார் .
https://twitter.com/RISHIKARTHEEK/status/1452223131427409931
இதனால் 16 ரன்னில் லிட்டன் வெளியேறினார். அப்போது ஆட்டதிலிருந்து வெளியேறிய லிட்டன் தாஸ் நோக்கி லஹிரு குமாரா ஆக்ரோஷமாக பேசினார். இதற்கு லிட்டன் தாசும் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது .இதைக்கண்ட இலங்கை அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விளக்கி அனுப்பி வைத்தனர் .இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக நிடாஹல் தொடரில் இலங்கை மற்றும் வங்கதேச வீரர்கள் மோசமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.