Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு” பேட்டியளித்த நடராஜன்… வைரலாகும் வீடியோ….!!

கிரிக்கெட் மைதானத்தில் நடராஜன் அஸ்வினிடம் தமிழில் பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியாக்கான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இரண்டு அணி வீரர்களும் போட்டியை வெல்லும் நோக்குடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் களம் இறங்கி விளையாடி வருகின்றனர். மைதானத்தில்  இருவரும்  பேசிக்கொண்டிருந்தபோது அஸ்வின் அங்கு வந்து அவர்களிடம் பேட்டி எடுத்துள்ளார்.

அப்போது நடராஜனிடம்  நெட் பவுலராக இருந்த நீங்கள் நட்டுவாக மாறி ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளீர்கள் இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நடராஜன், “ரொம்ப  சந்தோசமா இருக்கு. எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை.நெட் பவுலராக இருந்து முடித்துவிட்டு செல்லலாம் என்று தான் நினைத்தேன்.வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |