ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல் ரைசி “இன்டர்போல்” எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல் ரைசி “இன்டர்போல்” எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதாவது “இன்டர்போல்” எனப்படும் உலக போலீஸ் அமைப்பானது கடந்த 1923-ஆம் ஆண்டு சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக ஆஸ்திரியாவின் வியன்னாவில் தொடங்கப்பட்டது. இதையடுத்து சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வெய் என்பவர் இந்த அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். ஆனால் அவருடைய பதவிக்காலம் நான்கு வருடங்களாக இருந்த நிலையில் சீனாவிற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சென்ற மெங் ஹாங்வெய் திரும்பி வரவில்லை.
எனவே அவர் சீன அரசினால் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இஸ்தான்புல்லில் இந்த வருடத்திற்கான இன்டர்போலின் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் சர்ச்சைக்கு பெயர்போனவரும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவருமான மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல் ரைசி “இன்டர்போல்” அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய பதவிக்காலம் நான்கு வருடங்கள் ஆகும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சக ஐஜி-யாக அகமது நசீர் அல் ரைசி பணிபுரிந்து வருகிறார். மேலும் சித்ரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சர்ச்சைக்கு பெயர்போனவரான அகமது நசீர் அல் ரைசி தற்போது “இன்டர்போல்” தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.