Categories
அரசியல் மாநில செய்திகள்

கம்பீரமான உருவம்.. பட்டொளி வீசி பறக்கணும்… ADMK தானாக வந்து சேரும்… தீயாய் பேசிய டிடிவி ..!!

அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் ஆர் கே நகர் தேர்தல் போதே சொன்னேன், தேர்தல் ஆணையம் அதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள், மெஜாரிட்டி அவர்களிடம் இருக்கு என்பதற்காக அவர்களிடம் கட்சியை கொடுத்துவிட்டார்கள். அது தீயவர்கள் கையில் இருக்கிறது என்று சொல்லி தான் அம்மாவின் தொகுதியில் நாம் வாக்கு சேகரித்தோம், அதில் நாம் வெற்றியும் பெற்றோம்.

ஆனால் சட்டமன்ற பொது தேர்தல், பாராளுமன்ற பொது தேர்தல் என்று வந்த போது,  மக்கள் அதைத் தாண்டி தலைவரின் கட்சி, அம்மாவின் கட்சி என்று வாக்களித்தார்கள். அதனால் தான் நம்மோடு இருக்கின்ற பலபேர் அந்த சின்னத்தை பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த சின்னத்தின் மரியாதையை இதே மண்டபத்திலே, கட்சியின் இதயமாகிய பொதுக்குழு கூட்டத்திலேயே அவர்கள் யார் என்றே காட்டிவிட்டார்கள்.

அதிமுகவை வருங்காலத்திலே அதை மீட்டெடுக்க போகின்ற சக்தியாக உருவாக்கி கொண்டிருப்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான். நமக்கென்று ஒரு கட்சி இருக்கிறது, அதுவும் அம்மாவின் திருப்பெயரை தாங்கி இருக்கிறது. அந்த கொடியிலே இருக்கின்ற அம்மாவின் கம்பீரமான உருவம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பட்டொளி வீசி பறக்க வேண்டும். அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நாம் அனைவரிடத்திலும் இருக்கிறது.

நாம் ஜனநாயக ரீதியாக தேர்தல்களிலே வெற்றி பெற்ற பிறகு தானாக அந்த இயக்கம் உங்களிடம் வந்து சேரும். நமது உரிமை இருக்கிறது அது நமது புரட்சித்தலைவர், நமது இதய தெய்வம் அம்மா அவர்களின் சொத்து. அதிலே உள்ள அம்மா அவர்களின் ஒவ்வொரு தொண்டருக்கும், புரட்சித்தலைவரின் ஒவ்வொரு தொண்டருக்கும் உரிமை உள்ள இயக்கம் என தெரிவித்தார்.

Categories

Tech |