Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிச. 21-ம் தேதி அதிமுகவில் மாபெரும் சம்பவம்”…. நேரம் குறிச்ச ஓபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதற்கு தீவிர அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் என்னைத்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இடைக்கால பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட வேண்டாம் என்று ஓபிஎஸ் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் குஜராத்தில் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்ற போது ஓபிஎஸ் அங்கு சென்று இருந்தார். இந்த பயணம் ஓபிஎஸ் தரப்புக்கு புது தெம்பாக அமைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் வருகிற 21-ம் தேதி அதிமுக கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இந்த கூட்டம் சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது‌‌. அதிமுக கட்சியின் பிரிவுக்கு பிறகு ஓபிஎஸ் நடத்தும் முதல் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிவரும் நிலையில், அவருடைய பதவி 2026-ம் ஆண்டு வரை காலாவதியாகாமல் இருக்கும் என்று கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |