Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்கள் வெளியில் போகவேண்டாம்…. வீடு தேடி வருகிறது…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

வேலூரில் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் பணியை உதவி கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா மற்றும் வேறு பிரச்சனைகளால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வருவாய்த் துறையினரால் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வீடு தேடி சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இதனையடுத்து வேலூர் சப்- கலெக்டர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா தொற்றால் இறந்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி வீட்டிற்கு சென்று  இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். அப்போது தாசில்தார் ரமேஷ், பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் உலகநாதன் போன்றோர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |