Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற போது… சர்பதிவாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சர்பதிவாளரின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ காலனி பகுதியில் கணபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவில் சார்பதிவாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கணபதி குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணபதி சென்னையிலிருந்து தனது வீட்டிற்கு சென்ற போது முன் பகுதியில் உள்ள கதவு திறந்து இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு அதிலிருந்த 2 1/2 லட்சம் பணம் மற்றும் இரண்டு பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து கணபதி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கணபதியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சர்பதிவாளரின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |