நாடும் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசால் இலவச ரேஷன் மற்றும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் வாங்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை UIDAI அறிவித்துள்ளது. அதன் படி UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பது மூலமாக நாடும் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இலவசம் ரேஷன் வாங்கலாம். ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ மூலமாக மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் அட்டை பயன்படுத்தி ரேஷன் வாங்கலாம்.
இந்த வசதியை பெற ஆதர அட்டையை புதுபிக்க வேண்டியது கட்டாயம். மேலும் உங்கள் ஆதார் அட்டையை புதுபிக்க அருகில் உள்ள ஆதார் மையத்தை தொடர்பு கொள்ளலாம். ஆதார் மையம் குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான http://bhuvan.nrsc.gov.in/aadhar/ மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனை தொடர்ந்து மக்கள் வீட்டு வேலை முதல் வங்கி சேவைகள் வரை அனைத்து செய்வதற்கு ஆதர அட்டையை POI/POA ஆவணங்களுடன் புதுப்பித்து வைப்பது கட்டாயம். இதற்கான கட்டணமாக ஆன்லைன் மூலமாக செய்தால் ரூ.25 மற்றும் ஆஃப்லைன் மூலமாக செய்தால் ரூ.50 வசூலிக்கப்படும். மேலும் ஆதார் அட்டை குறித்த ஏதேனும் புகார்களுக்கு 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.