Categories
தேசிய செய்திகள்

மக்களவை: ஐஐடி, ஐஐஎம்-ல் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து…. மத்திய அரசு சொன்ன தகவல்….!!!!

நாட்டில் மொத்தமுள்ள ஐஐடிகளில் 4,502 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கல்வித்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது, நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகிய இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் இப்போது 493 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டி இருக்கிறது என்று கூறினார். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய மத்திய பல்கலைகளில் 11,000 பேராசிரியா் பணி இடங்கள் காலியாகயிருப்பது மத்திய கல்வி அமைச்சக தகவல் வாயிலாக தெரியவந்துள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் ரவிக் குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துபூா்வமாக சமா்ப்பித்த பதிலில், நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 18,956 பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் மற்றும் உதவிப்பேராசிரியா்கள் பணியிடங்களில் 6,180 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஐ.ஐ.டி-க்களில் அனுமதிக்கப்பட்ட 11,170 பேராசிரியா் பணி இடங்களில் 4,502 பணி இடங்கள் காலியாக உள்ளது. ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட 1,566 பேராசிரியா் பணியிடங்களில் 493 இடங்கள் காலியாக இருக்கிறது.

இந்த காலிபணியிடங்களை போா்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்ப அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் வாயிலாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா். காலிப் பணியிடங்கள் உருவாவதும், அதை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைதான் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் உருவாவது மற்றும் அதனை நிரப்புவது குறித்த நடவடிக்கைகளை ஒவ்வொரு மாதமும் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |