பஞ்சாப் மாகாணத்தில் மேலும் 73 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பானது அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு பாதிப்பால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 73 நபர்களுக்கு புதிதாக டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையில் பஞ்சாபில் இந்த வருடம் மட்டும் டெங்கு காய்ச்சலால் 151 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாகாணத்தில் மொத்தம் 25,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து லாகூரில் 125 புதிய பாதிப்புகளுடன் நோயாளிகளின் எண்ணிக்கை 18,079 ஆக உயர்ந்துள்ளது என்று ஏஆர்ஒய் செய்தி தெரிவித்துள்ளது. எனவே புள்ளிவிபரங்களின்படி தற்போது 150 நோயாளிகள் பஞ்சாப் முழுவதும் உள்ள வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.