Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. மிக மோசமாக பாதிக்கும் கண் நோய்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் ‘கான்ஜுன்டிவிஸ்’ என அழைக்கப்படும் கண் அலர்ஜி நோய் பொதுமக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோயால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மும்பை மருத்துவமனைகளில் பலர் சிவந்த கண்களுடன் வரிசையில் நிற்கின்றனர். அதனை தொடர்ந்து மழை காலங்களில் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது நோய் பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸ்கள் பெருக்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். அதனால் தான் தற்போது இந்த நோயின் தாக்கம் வேகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான அறிகுறிகளான கண்களை நீர் பெருகுதல், வீக்கம், கண் எரிச்சல் ஆகியவை இருக்கிறது.

இந்நிலையில் நோயால் அதிகமாக மக்கள் பாதிக்கப்படுவதால் இது குறித்து மும்பை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கண்களில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவர்களை சந்திக்க வேண்டும். கடந்த வரம் 250 முதல் 300 மக்கள் இந்த நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோய் வராமல் இருக்க அடிக்கடி கண்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். மேலும் இந்த நோய் 5 அல்லது 6 நாட்களில் சரியாகிவிடும். இருப்பினும் மக்கள் கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்‌ கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |