Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. இந்தியாவில் நிலவரம் என்ன?…. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்…!!!!

தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கியதுமே இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா உறுதிசெய்யப்பட்டால் ஒமிக்ரான் பாதிப்பா என்று கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றது.

எனினும் இந்தியாவில் கடந்த 2-ம் தேதி இந்த வைரஸ் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் 2 நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியானது. ஆனால் இந்த வைரஸ் தற்போது நாட்டின் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 236 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனிடையில் மராட்டிய மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 65 பேரில் இதுவரை 35 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் டெல்லியில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 64 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |