Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் மூன்றாம் அலை…. அதுவும் இந்த மாதத்திலேயே ஆரம்பம்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவுக்குள் காலடிவைத்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து, தற்போது தான் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 3-வது அலை தொடங்கும் என்று தேசிய covid-19 சூப்பர் மாடல் குழு கணித்துள்ளது. இருந்தாலும் 2-ஆம் அலையை விட 3-ம் அலையின் பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும் என்று குழுவின் தலைவர் வித்யாசாகர் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,500-ஆக உள்ளது. மேலும் ஒமைக்ரான் வைரஸால் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கட்டாயம் 3-ஆம் அலை உருவாகும் என்று வித்யாசாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதனால் ஏராளமானவருக்கு போதிய நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் 2-ஆம் அலையை விட 3-ஆம் அலையில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று வித்யாசாகர் கூறியுள்ளார்.

Categories

Tech |