தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் சில வருடங்களாக மகளிர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை 23 வயதான நிலாப் துராணி என்பவர் நடத்திவருகிறார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்பு பள்ளி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அவர்கள் ஆட்சி அமைந்தவுடன் ஒரு பெண் கூட ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக பள்ளிக்கு வரவில்லை என்று கூறுகிறார்.
மேலும் முன்பதிவு செய்திருந்த பெண்களும் வகுப்புகளுக்கு வரலாமா என்று கேட்டாலும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக வரத்தயங்குகின்றனர். தற்போது மகளிர் ஓட்டுநர் பயற்சி பள்ளியானது இரு ஊழியர்களுடன் மட்டுமே இயங்கி வருகிறது. குறிப்பாக ஆப்கானின் வேறு இடங்களிலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆரம்பிக்கும் திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார்.
இதனையடுத்து தலீபான்களிடம் இருந்து அவருக்கு மிரட்டல் வந்ததால் பள்ளியை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிட்டு தலீபான்கள் பெண்களை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்க செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.