Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுடைய அனைத்து கடன்களையும் தள்ளுபடி பண்ணுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் சுய உதவி குழுவினர்…!!

நிலமற்ற விவசாயிகளுக்கு அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுய உதவிக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஓரமாக அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது “விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன், நகை கடன் ஆகியவை ரத்து செய்வதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே விவசாய கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிலமில்லாத விவசாயிகளுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பேராவூரணி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டோம். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்றுதிரண்டு ஓரமாய் அமர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை நடத்துவோம். மேலும் எங்களுடைய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் மற்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்” என அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |