மகன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிதக்கா முனியன்வட்டம் பகுதியில் ஜானகி என்பவர் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானகியின் மகன் கண்ணனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன்பின் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த தகவலை கேட்ட தாய் ஜானகி கதறி அழுது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் இருவரின் உடலுக்கும் ஊர் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.