குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஈச்சாந்த ஓடை பகுதியில் டிரைவரான விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 3 வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே விக்னேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சண்முக லட்சுமி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் சண்முக லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது மகனாக கமலேஷின் கழுத்தை கயிற்றினால் கட்டி இறுக்கி கொன்று விட்டார். இதனையடுத்து சண்முக லட்சுமியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலேஷ் மற்றும் சண்முக லட்சுமியின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் விக்னேஷ், அவரின் தாயாரான மல்லிகா மற்றும் விக்னேஷின் அண்ணான சுரேஷ் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சனையால் இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மூன்றுபேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.