Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மகனின் சாவில் சந்தேகம்…. புகார் அளித்த தாய்…. போலீஸ் முடிவு….!!

தாய் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட மகனின் சடலத்தை காவல்துறையினர் தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் நவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு விசித்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நவீன்குமாரை அவரின் நண்பர் சீனிவாசன் கட்டாயப்படுத்தி மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அப்போது மது அருந்திய சிறிது நேரத்திலேயே நவீன்குமாருக்கு வாயில் நுரை தள்ளி மயக்க மடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து நவீன்குமாரை அவரது நண்பர்கள் இருவரும் அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் களித்து நவீன்குமாரின் மனைவி விசித்ரா தனது கணவர் சுயநினைவின்றி கிடப்பதாக சத்தம் போட்டு கதறி அழுததை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நவீன்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நவீன்குமார் குடிபோதையில் உயிரிழந்ததாக நினைத்து அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவருக்கு இறுதி சடங்கு செய்து அருகில் இருக்கும் சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் தற்போது நவீன்குமாரின் மரணத்தில் சந்தேகம் அடைந்த தாய் சாந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் நவீன்குமார் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |