Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல்… திடீரென தந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தனது மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான பொன்னுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் பொன்னுசாமியின் மகனான செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் செந்தில்குமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்  அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதனையடுத்து செந்தில்குமாரின் தந்தையான பொன்னுசாமி தனது மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல்  மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இதனால் பொன்னுசாமியும் திடீரென பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |